சர்வதேச கடலில் நிலை கொண்டுள்ள சீனக்கப்பல்: வெளியாகியுள்ள செய்மதி புகைப்படம்
யுவான் வாங் 5
யுவான் வாங் 5 சீன கப்பல் தரித்து நிற்கும் செய்மதி புகைப்படம் வெளியாகியுள்ளது, இதன்படி குறித்த கப்பல் அதன் வேகத்தை குறைத்துள்ளதாகவும் சர்வதேச கடலில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கப்பலின் வருகை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன கருத்துரைக்கும் போது "சீனக் கப்பல் இன்னமும் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிக்கவில்லை எனவும் அது இலங்கைக்கு வருமா என்பது தொடர்பில் உறுதியாக எதுவும் தெரிவிக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.
மேலும், சீனாவின் 'யுவான் வாங் 5' கப்பல் இன்னமும் இலங்கைக் கடற்பரப்புக்குள் பிரவேசிக்கவில்லை, சர்வதேச கடற்பரப்பில்தான் தரித்து நிற்கின்றது எனவும் தெரிவித்தார்.
இரு நாட்டு அரசாங்கங்களும் இந்தக் கப்பல் விவகாரம் தொடர்பில் தீவிர பேச்சில் ஈடுபட்டுள்ளன என்றும் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்குள் குறித்த கப்பல் வருமா என்பது தொடர்பில் எம்மால் உறுதியான பதில் எதுவும் வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
பயண வேகத்தை குறைத்துள்ள சீனக் கப்பல்
இந்தியாவின் எதிர்ப்பை தொடர்ந்தும், இலங்கை, தாம் முன்னர் வழங்கிய, துறைமுக அனுமதியை திரும்பப் பெற்றதையடுத்தும், சமீபத்திய செயற்கைக்கோள் படக் காட்சிகளின் படி குறித்த கப்பல் அதன் பயண வேகத்தை குறைத்துள்ளது.
எனினும் இந்திய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஸ்தாபனத்தின் தரப்புகளின் தகவல்படி, கப்பலின் இலக்கு இலங்கை துறைமுகத்தை நோக்கியே தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளன.
நோர்வே நிறுவனமான மாரிடைம் ஒப்டிமாவால் சேகரிக்கப்பட்ட அட்லஸ் மென்பொருள் தரவுகளின்படி, யுவான் வாங் 5 தற்போது ஹம்பாந்தோட்டையிலிருந்து 599 கடல் மைல்கள் தொலைவில் உள்ளது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தியா எதிர்ப்பு
இதன்படி, சீனத் துறைமுகமான தைகாங்கிலிருந்து புறப்பட்டதிலிருந்து தொடர்ந்து 35 மணி நேரம் இந்த கப்பல் கடலில் பயணித்துக்கொண்டிருக்கிறது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஆகஸ்ட் 11 முதல் 17 வரை நிறுத்தப்படவிருந்த கப்பலின் வருகையை, பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தியா ஆட்சேபித்ததை அடுத்து, அதன் வருகையை ஒத்திவைக்குமாறு இலங்கை வெளியுறவு அமைச்சகம் கடந்த வாரம் பீய்ஜிங்கிடம் கேட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
சீன கப்பல் விவகாரம் - இலங்கையின் ஐ எம் எஃப் செயல்முறைக்கு அச்சுறுத்தல்..! வெளியாகிய தகவல் |
தேவையில்லாமல் இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டாம்..! இந்தியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த சீனா |
எனது அனுமதியின்றி சீனக்கப்பல் நுழைய முடியாது..! துறைமுக அதிகாரி அதிரடி |
சீன கப்பல் விவகாரத்தால் சிக்கித் தவிக்கும் சிறிலங்கா - வெளியாகவுள்ள முக்கிய அறிக்கை! |
சீன கப்பலுக்கு அனுமதி வழங்க கோரிக்கை - அரசுக்கு கடும் அழுத்தம் |