யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை : கரிசனை வெளியிட்டுள்ள அமெரிக்கா
காவல்துறையினர் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சால் மேற்கொள்ளப்பட்டுள்ள யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் கரிசனை வெளியிட்டுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் மனித உரிமை ஆணைக்குழுவும் இது தொடர்பில் வெளியிட்டுள்ள கரிசனைகளை அமெரிக்காவும் பகிர்ந்து கொள்வதாக அவர் தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் போதைப்பொருள் பாவனை மற்றும் அதன் விநியோகத்தை இல்லாதொழிப்பது அத்தியாவசியமானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் ஆட்சி
எனினும், குறித்த நடவடிக்கைகள், இலங்கையில் சட்டத்தின் ஆட்சி உரிய முறையில் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
The United States shares the concerns expressed by @HRCSriLanka and the Bar Association of Sri Lanka about the Yukthiya Operation. Combatting drug trafficking is essential; it's also crucial that law enforcement operations uphold the principles of the rule of law and due process.… https://t.co/w1J7wZex7j
— Ambassador Julie Chung (@USAmbSL) January 10, 2024
இந்த சமநிலையை பேணுவது நீதிக்கும் மக்களின் நம்பிக்கையை தக்க வைப்பதற்கு அவசியம் என ஜுலி சங் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |