பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் போதைப்பொருளுடன் கைது
35 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சோனி என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வர்த்தகர் கொரியர் சேவை ஊடாக கொண்டுவரப்படும் போதைப்பொருட்களை வடமத்திய மாகாணத்தில் பாரியளவில் கடத்துவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்நிலையில், காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இரகசிய கண்காணிப்பு கடமைகளை மேற்கொண்டு வீடு மற்றும் வர்த்தக நிலையங்களை சுற்றிவளைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வர்த்தகரின் வர்த்தக வலையமைப்பிற்குள் கொண்டு வரப்பட்ட போதைப் பொருட்கள் வீட்டுக்குள் வைத்திருந்து வடமத்திய மாகாணத்தில் பாரியளவில் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு கிடைக்கப்பெற்றுள்ளதுடன், கெக்கிராவ காவல்துறையின் ஊழல் எதிர்ப்பு மத்திய தாக்குதல் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்....! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        