இரத்து செய்யப்பட்டது அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை
வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் நடைபெறவிருந்த அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனிமுத் எதிர்வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சில பகுதிகள் செயல்படுத்தப்படுவதைப் பொறுத்தே அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.
லெபனானில் தீவிர போர்
இந்நிலையில் லெபனானில் போர் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலும் - ஹிஸ்புல்லாவும் வெள்ளிக்கிழமை போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க தரப்புக்கள் கூறியுள்ளன.

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இடைக்கால ஒப்பந்தம், ஒரு நீடித்த மத்திய கிழக்கு அமைதி ஒப்பந்தமாக மாறுவதற்கான வாய்ப்புகள் இதனால் பாதிக்கப்பட்டன என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
லெபனானில் தாக்குதல் தீவிரமடைந்ததால், வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் திட்டமிடப்பட்டிருந்த அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தைகள் இதன் காரணமாகவே இரத்து செய்யப்பட்டுள்ளன.
இது, உலகளாவிய கப்பல் போக்குவரத்திற்காக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதை உறுதிசெய்ய இன்றியமையாத இந்தப் பேச்சுவார்த்தைகளின் காலக்கெடு குறித்து புதிய நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளதாக மத்திய கிழக்கு வட்டாரங்கள் விவரித்துள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |