மாகாண சபைத் தேர்தல் கோரிய விக்ரம் மிஸ்ரியின் கருத்து அநுர ஊடக பிரிவால் அமுக்கப்பட்டது ஏன்...!
இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம்மிஸ்ரி இலங்கையில் தனது சிலமணிநேர விறுவிறு சுறுசுறு சந்திப்புக்களை தமிழ்பேசும் ஆறு கட்சிகளின் அரசியல் பேரவை உட்பட்ட தரப்புக்களுடன் முடித்துக்கொண்டு நேற்று மாலையே டெல்லிக்குப் பறந்துவிட்டார்.
மிஸ்ரியின் பயணத்தின் முடிவில் இரண்டு தரப்புக்களில் இருந்து ஊடகங்களுக்குரிய அதிகாரபூர்வ அறிக்கையிடல்கள் வந்திருந்தன.
இரண்டு தரப்புகளின் ஊடக அறிக்கைகளை நோக்கினால் மாகாண சபைத்தேர்தல்களை இனியும் தாமதப்படுத்தால் நடத்துங்கள் என்ற செய்தி அனுரவுக்கு டெல்லிசார்பாக சொல்லபட்டதான விடயத்தை இந்தியதரப்பு தனது அறிக்கையிடலில் முன்னிலைப்படுத்திருந்தது.
ஆனால் இதற்கு மாற்றாக அநுரகுமார திசாநாயக்காவின் அரசதலைவர் ஊடகப் பிரிவு இந்த விடயத்தை தனது அறிக்கையிடலில் சொல்லவேயில்லை ஆகமொத்தம் இந்த முறையும் கொழும்பின் பழைய கண்ணா மூச்சியின் ஆட்டத்தின் நீட்சிவந்துள்ளது.
மறுபுறத்தே ஜேவிபி உள்ளுடன் அநுர ஆட்சிக்கோ அது என்னதான் சிஸ்ரம் சேஞ் சொன்னாலும் மாகாணசபை பிரச்சனையை அது அரசியல் ரீதியான உள்ளுடன் வெறுப்புடன் கையாள்கிறது.
இதற்கும் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக இந்தியா தமது அரசாங்கத்துக்கு வலியுறுத்தியது என்பதை முன்னிலைப்படுத்தினால் அது தமது அரசாங்கத்தின் மீதான வெறுப்புக்கும் எதிர் அரசியல் அணிகளுக்கும் ஒரு முதலீடாகும் என்ற அச்சத்தில் அது தனது அறிக்கையிடலில் அதனை தவிர்த்தாக தெரியும் நிலையில் இந்தவிடயத்தை மையப்படுத்தி வருகிறது ஐபிசி தமிழின் செய்தி வீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |