யுக்திய விசேட சுற்றிவளைப்பில் மேலும் பலர் கைது

Sri Lanka Police Sri Lanka Police Investigation Drugs
By Kathirpriya Feb 15, 2024 06:15 AM GMT
Report

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று (15) அதிகாலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 656 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 535 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் இருந்த 121 சந்தேக நபர்களும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சுற்றிவளைப்பில் 241 கிராம் 913 மில்லி கிராம் ஹெராயின், 139 கிராம் 892 மில்லி கிராம் ஐஸ்,1 கிலோ 744 கிராம் கஞ்சா, 27,780 கஞ்சா செடிகள், மாவா 10 கிராம், 1521 போதை மாத்திரைகள், 73 கிராம் மதன மோதகம் உள்ளிட்ட போதைப்பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறைந்த வருமானம் பெறுவோரிற்கான பணம்! இன்று முதல் நடைமுறை

குறைந்த வருமானம் பெறுவோரிற்கான பணம்! இன்று முதல் நடைமுறை

விசாரணைக்கு பரிந்துரை

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 535 சந்தேக நபர்களில் 16 சந்தேக நபர்கள், காவல்துறையினரின் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் காவல்துறை விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் உள்ளவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுக்திய விசேட சுற்றிவளைப்பில் மேலும் பலர் கைது | Yukthiya Operations More People Arrested

இதில், ஒருவர் தடுப்புக் காவல் உத்தரவிற்கு அமைய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், 03 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கோடிக்கணக்கான வருமானத்தை ஈட்டித்தந்த காதலர் தினம்

இலங்கையில் கோடிக்கணக்கான வருமானத்தை ஈட்டித்தந்த காதலர் தினம்

போதைப்பொருள் குற்றங்கள்

தவிரவும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் இருந்த 121 சந்தேக நபர்களில் 06 பேர் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணையும், 102 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

யுக்திய விசேட சுற்றிவளைப்பில் மேலும் பலர் கைது | Yukthiya Operations More People Arrested

அதேநேரம் குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த 13 சந்தேகநபர்களும் இதில் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

கொழும்பில் மரியாள் போன்று சுற்றித்திரிந்த பெண்! விசாரணையில் வெளிவந்த உண்மை

கொழும்பில் மரியாள் போன்று சுற்றித்திரிந்த பெண்! விசாரணையில் வெளிவந்த உண்மை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025