குறைந்த வருமானம் பெறுவோரிற்கான பணம்! இன்று முதல் நடைமுறை
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (15) முதல் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஒரு மாத காலத்திற்கு அந்த விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
இரண்டாம் கட்டத்தின் கீழ் சுமார் 4 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்திருந்தார்.
நிகழ்நிலையில் விண்ணப்பித்தல்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்...
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நிகழ்நிலையில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், பிரதேச செயலக அலுவலகங்களில் உள்ள விசேட பிரிவுகள் ஊடாகவும் விண்ணப்பங்களை வழங்கலாம். ஒரு மாதத்திற்குள் விண்ணப்பங்கள் கோரலை எதிர்பார்க்கின்றோம்.
உதவித்திட்டங்களுக்கு 205 கோடி ரூபாய்
முதல் சுற்றில் 20 இலட்சம் விண்ணப்பங்கள் உறுதி செய்யப்பட்டது. இது இரண்டாவது சுற்றில் 24 இலட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் ஜூலை மாதத்தில் வழங்கப்படும்.
மொத்தத்தில், இந்த ஆண்டு நலத்திட்டங்களுக்கு அரசாங்கம் 205 கோடி ரூபாய் செலவழிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.” எனத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |