சர்வதேச அழுத்தம் வந்தாலும் அஞ்சமாட்டோம்.! ரணில் அரசாங்கம் சூளுரை
சர்வதேசத்தில் இருந்து எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் முன்வைத்த காலை பின்வைக்கப்போவதில்லை, போதைப்பொருள் வலையமைப்புக்கு முடிவுகட்டும்வரை யுக்திய நடவடிக்கை தொடரும் என்று சூளுரைத்துள்ளார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்.
யுக்திய செயல் திட்டத்தின் முதல் மாத நடவடிக்கை வெற்றியளித்துள்ளது. எனினும், யுக்திய நடவடிக்கயை முன்னெடுக்கும்போது பல தடைகளும் வருகின்றன.
சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் வருகின்றன, நாட்டுக்கு எதிராக செயற்படும் சில குழுக்கள் உள்ளன, அந்த குழுக்களும் எதிர்க்கின்றன, எமக்கு எதிராக செயற்படுகின்றன, சமூகவலைத்தளங்களில் சேறுபூசுகின்றன.
போதைப்பொருள் வலையமைப்பில் உள்ளவர்களிடம் பணம் வாங்கும் தரப்புகளே இந்த செயலில் ஈடுபட்டுள்ளன.
யுக்திய நடவடிக்கையை நிறுத்துவதற்கு சில மதத்தலைவர்கள் முற்படுகின்றனர், சில சட்டத்தரணிகளும் தொடர்புபட்டுள்ளனர், அரசியல் கட்சிகளில் உள்ள சிலரும் தொடர்புபட்டுள்ளனர்.
அத்துடன் யுக்திய நடவடிக்கை என்பது ஊடக கண்காட்சி, நாடகம் என்றெல்லாம்கூட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மாலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |