பிரேசில் அதிபரை முதல் முறையாக நேரில் சந்திக்கிறார் ஜெலன்ஸ்கி
Volodymyr Zelenskyy
Russo-Ukrainian War
Brazil
By Vanan
உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவை நாளை(20) புதன்கிழமை நேரில் சந்திக்கவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இரு தலைவர்களும் நியூயோர்க் சென்றுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
உலகத் தலைவர்களுடன் சந்திப்பு
இலங்கை நேரப்படி மாலை 4 மணிக்கு இச்சந்திப்பு நடைபெறும் என்று பிரேசில் அதிபரின் செய்தித் தொடர்பாளர் சிந்தியா ரிபெய்ரோ தெரிவித்துள்ளார்.
ஏனைய உலகத் தலைவர்களுடனும் ஜெலன்ஸ்கி தனது திட்டங்கள் தொடர்பில் பல சந்திப்புகளை நடத்தியதாக அவர் கூறினார்.
ரஷ்யாவிற்கு எதிராக பாரிய எதிர்த்தாக்குதலை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், உக்ரைனுக்கு அதிக ஆதரவைக் கோர இந்தக் கூட்டத்தொடரை ஜெலன்ஸ்கி பயன்படுத்துவார் எனக் கூறப்படுகிறது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்