ட்ரம்ப் - ஜெலென்ஸ்கி மோதல் : உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஆதரவு
அமெரிக்க (United States) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் (Donald Trump) மற்றும் ஜெலென்ஸ்கி வார்த்தை மோதலுக்கு பிறகு ஐரோப்பிய தலைவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
உக்ரைன் (Ukraine) ஜனாதிபதி ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) மற்றும் அமெரிக்க (United States) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் (Donald Trump) இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்றைய தினம் (28.02.2025) வெள்ளை மாளிகையில் இடம்பெற்றதுடன் போர் நிறுத்தம் குறித்தும் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
போர் நிறுத்தம்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், போர் நிறுத்தம் குறித்த விவாதங்கள் சர்வதேச நாடுகள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
Zelenskyy: Putin broke the ceasefire. He killed our people. He did not exchange prisoners. We signed the exchange of prisoners, but he didn't do it. What kind of diplomacy you are speaking about?
— NEXTA (@nexta_tv) February 28, 2025
JD Vance: I think it's disrespectful for you to come into the Oval Office and try… pic.twitter.com/b37ILkuaSJ
இந்த சந்திப்பை அடுத்து ஓவல் அலுவலகத்தில் ஊடகங்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் பேச்சை மறுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேசியது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன்போது, பேச்சுவார்த்தையின் போது அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ், ரஷ்யாவுடன் போரிடுவதற்கு உங்கள் நாட்டில் ஆண்கள் இல்லை என ஜெலென்ஸ்கியிடம் தெரிவித்துள்ளார்.
கடும் வாக்குவாதம்
இந்த கருத்தால் கோபமடைந்த ஜெலென்ஸ்கி தங்கள் நாட்டிற்கு வந்து பார்க்குமாறு அமெரிக்காவின் துணை ஜனாதிபதியை அழைத்துள்ளார்.
இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் அதிகரிக்கவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறுக்கிட்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப் “உங்களிடம் போதுமான துருப்புகள் இல்லை, நீங்கள் போர் நிறுத்தத்தை விரும்புகிறீர்களா இல்லையா என்பதை எங்களிடம் கூற முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய கவுன்சில்
இந்நிலையில், டிரம்ப்-ஜெலென்ஸ்கி-வான்ஸ் இடையிலான வார்த்தை மோதலுக்கு பிறகு ஐரோப்பிய தலைவர்கள் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை தெரிவித்து வருகின்றனர்.
There is an aggressor: Russia.
— Emmanuel Macron (@EmmanuelMacron) February 28, 2025
There is a victim: Ukraine.
We were right to help Ukraine and sanction Russia three years ago—and to keep doing so.
By “we,” I mean the Americans, the Europeans, the Canadians, the Japanese, and many others.
Thank you to…
போலந்து பிரதமரும், ஐரோப்பிய கவுன்சிலின் தலைவருமான டொனால்ட் ட்ஸ்க் X தளப் பதிவில், “உக்ரைன் தோழர்களே, நீங்கள் தனியாக இல்லை” என பதிவிட்டுள்ளார்.
போர்ச்சுகலில் இருந்து புறப்பட்ட போது, டிரம்ப்-ஜெலென்ஸ்கி வார்த்தை மோதல் நிகழ்வு குறித்து பதிலளித்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ரஷ்யா தான் ஆக்கிரமிப்பாளர், உக்ரைன் மக்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்று குறிப்பிட்டார்.
பொருளாதார தடை
மேலும், 3 வருடங்களாக ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதித்ததிலும், உக்ரைனுக்கு உதவியதிலும் நாங்கள் அனைவரும் சரியாக இருந்தோம், இதனை தொடர்ந்து செய்வதும் சரி தான் என்று தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவின் கண்ணியம், உரிமைகள் மற்றும் பாதுகாப்பிற்காக தொடக்கத்தில் இருந்து போராடுபவர்களை மதிப்பது முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 2 நாட்கள் முன்
