உக்ரைனுக்கு கிடைத்த பாதுகாப்பு பொதி
நோர்வே மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளின் கூட்டு பாதுகாப்புப் பொதிக்கு உக்ரைனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
இருநாடுகளும் உக்ரைனுக்கு 9,000 பீரங்கிகளை நன்கொடையாக வழங்க ஒப்புக்கொண்டதாக நோர்வேயின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிசெய்த நிலையில், ஜெலென்ஸ்கி தனது டுவிட்டரில் நன்றியை பகிர்ந்துள்ளார்.
பாதுகாப்பு பொதி
“புதிய கூட்டுப் பாதுகாப்பு உதவிப் பொதிக்கு நோர்வே மற்றும் டென்மார்க் நாடுகளின் அரசாங்கங்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
போர்க்களத்தில் அதிகளவான ஆயுதங்கள், பீரங்கிகள் தேவைப்படுகின்றன. இந்த பாதுகாப்பு பொதி அதற்கு உறுதுணை புரியும் என நான் நினைக்கிறேன்.
ஒன்றாக நாங்கள் எங்கள் பொதுவான வெற்றியை நெருங்கி வருகிறோம்” - எனக் கூறியுள்ளார்.
I am grateful to the governments of Norway ?? and Denmark ??, led by @jonasgahrstore and @Statsmin, for the new joint defense assistance package. The additional batch of artillery shells is much needed by ?? on the battlefield. Together we are bringing our common victory closer.
— Володимир Зеленський (@ZelenskyyUa) June 15, 2023
எதிர் தாக்குதலுக்கான உதவி
இதேவேளை, ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் எதிர் தாக்குதலுக்கான உதவிகளை அதிகரிக்க அமெரிக்காவிற்கு வெடிமருந்துகளை வழங்க ஜப்பான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவுடனான அதன் நீண்டகால பாதுகாப்புக் கூட்டணியின் ஒரு பகுதியாக வெடிமருந்துகளைப் பகிர்ந்து கொள்வதற்காக 155 மிமீ பீரங்கி குண்டுகளை வழங்குவது குறித்து ஜப்பான் பரிசீலித்து வருகிறதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
