செல்லப்பிராணியால் உயிர் பிழைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்
சிம்பாப்வேயின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கை விட்டல் (Guy Whittall) சிறுத்தை தாக்கியதில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கை விட்டல் தனது செல்ல நாய் Chikara-வுடன் Humani பகுதியில் மலையேற்றத்திற்குச் சென்றுள்ளார்.
சிறுத்தைப்புலியால் தாக்கம்
இதன்போது, சிறுத்தைப்புலி ஒன்று திடீரென அவர் மீது பாய்ந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் உரிமையாளரின் உயிரைக் காப்பாற்ற அவரது செல்ல நாய் சிக்கரா கடுமையாகப் போராடியது.
இதனையடுத்து அந்த நாயையும் சிறுத்தை தாக்கிவிட்டு தப்பி ஓடி சென்றுள்ளது.
அவசர அறுவை சிகிச்சை
சம்பவத்தையடுத்து விட்டல் உலங்கு உலங்கு வானூர்தி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், வைத்தியர்கள் அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்து உயிரைக் காப்பாற்றினர்.
ஒரு காலத்தில் சகலதுறை வீரராக சிறந்து விளங்கிய கை விட்டல், நடுத்தர வரிசையில் சிம்பாப்வேயின் முதுகெலும்பாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |