அரசாங்க விரோத சக்திகளின் திட்டமிட்டசதி - ஒருபோதும் இழக்கமாட்டோம் -அமைச்சர் தினேஸ் உறுதி
srilanka
goverment
dinesh gunawardena
gsp plus
By Sumithiran
மனித உரிமை ஆணைக்குழு மூலம் எமது படையினரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான பரப்புரைகளில் ஈடுபட்டவர்களே தற்போது ஜிஎஸ்பி வரிச்சலுகையை இலங்கை இழக்கப்போவதாக பிரசாரம் செய்வதாக வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கும் ஆபத்து எதுவுமில்லை. ஐரோப்பிய ஒன்றியம் ஜிஎஸ்பி வரிச்சலுகையை இடைநிறுத்தவுள்ளது என்ற அச்சத்தை அரசாங்க விரோத சக்திகளே பரப்புகின்றனர்.
நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம் ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கும் எந்த ஆபத்துமில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி