ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம் : அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
ஜப்பானின் தென்மேற்குப் பகுதியான குமமோட்டோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் சனே தகைச்சி (Sanae Takaichi) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று (28) ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இன்னும் பலரைக் காணவில்லை என்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு மத்தியில், மீட்புக் குழுவினர் உயிருடன் இருப்பவர்களைத் தேடும் பணியைத் தொடர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மீட்பு நடவடிக்கை
இதேவேளை உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், முடிந்தவரை பலரைக் காப்பாற்றவும் மீட்கவும் அரசாங்கம் தன்னிடம் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தும் எனவும் பிரதமர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

அத்துடன் ஏழு பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும், 29 பேர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தின் உயர்மட்ட செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |