தன்னை தானே சுட்டு காவல்துறை உத்தியோகத்தர் உயிர்மாய்ப்பு
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Death
By Pavi
காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்த உத்தியோகஸ்தர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
உயிரிழந்தவர் வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவில் பணியாற்றி வந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை (29.07.2026) நடந்துள்ளது.
உயிரை மாய்த்துக்கொண்ட உத்தியோகஸ்தர்
இறந்த காவல்துறை கான்ஸ்டபிள் பேராதனையை சேர்ந்த 28 வயதுடையவவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் காவல் நிலையத்தின் பிரதான வாயிலுக்கு அருகே தனது T 56 தாக்குதல் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த காவல்துறை கான்ஸ்டபிள் பாணத்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி