வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு அரசின் மகிழ்ச்சி செய்தி
2026 ஆம் ஆண்டில் 10,000 தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்பிற்காக அனுப்புவதற்கான ஏற்பாடுகளை இலங்கை முன்னெடுத்துள்ளது.
குறித்த விடயத்தை வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு துறையில் பணியாற்றுவதற்காகச் செல்லவுள்ள 164 தொழிலாளர்களுக்கு பயண அனுமதிப்பத்திரங்களை வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு
மேலும் இந்த வேலைத்திட்டம் முறை யான மற்றும் வெளிப்படையான நடைமுறையின் கீழ் முன்னெடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாண்டில் இதுவரை 2500 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 6500 தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் தயார் நிலையில் உள்ளன.
இவற்றுடன் கூடுதலாக ஒரு புதிய துறையில் மேலும் 1,000 வாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன் இது ஒட்டுமொத்த இலக்கான 10,000 ஐ அடைவதற்கு உதவும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் உத்தியோக பூர்வமாகப் பதிவு செய்வதன் மூலம் இலங்கையர்கள் குறைந்த செலவிலும் அதிக நம்பகத்தன்மையுடனும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெற்று தங்களின் வெளிநாட்டு வேலைக்கனவை நனவாக்கிக் கொள்ள முடியும் என்றும் அமைச்சர் ஹேரத் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |