ஒரே FB பதிவால் சிதைந்த இளைஞனின் வாழ்க்கை...! 27 கோடி அபராதம் - 5 ஆண்டுகள் சிறை
சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவொன்றைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பல மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்ட விவகாரம் அதிர்வலையை ஏற்ப்படுத்தி உள்ளது.
அண்மையில் கதிர்காமத்தை நோக்கி சென்ற சுப்ரமணி எனும் நாயை இளைஞன் தாக்கிய விடயம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பேசுபொருளானது.
அதனை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் நடந்த கருத்து மோதல்களின் போதே அனோஜன் என்னும் கல்முனையை சேர்ந்த சவூதி அரேபியாவில் தொழில்புரியும் குறித்த இளைஞன் முஸ்லிம்கள் மீதான கோபத்தை காட்டும் வகையில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
வெளிநாடுகளில், குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிரும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், அந்தந்த நாட்டுச் சட்டங்களைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்து அதிகம் பேசுபொருளான பின்னரே அவர் சவூதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் 3 மில்லியன் (சுமார் 27 கோடி இலங்கை ரூபாய்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கை அரசாங்கம், தூதரகம் மூலம் அனோஜனின் தண்டனைக் குறைப்புக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |