உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் பலியான உயிர்கள் - பலர் படுகாயம்
ரஷ்யாவின் எல்லைப் பகுதியான பெல்கோரோடில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 19 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத்தாக்குதல்களை மொஸ்கோவில் உள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கடுமையாகக் கண்டித்துள்ளது.
எல்லைக்கு அருகிலுள்ள கிராமமொன்றில் உள்ள வணிக நிறுவனம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், பெல்கோரோட் நகருக்கு வெளியே உள்ள பிறிதொரு நகரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் மற்றொருவர் உயிரிழந்துள்ளார்.
உக்ரைன் போர்முனையில் தோல்வி
இதேவேளை, உக்ரைன் எல்லைக்கு அருகிலுள்ள ஷெபெகினோ நகரில் பேருந்து ஒன்று தாக்குதலுக்கு உள்ளானதில் காயமடைந்த 19 பேரில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவருகிறது.

Image Credit: NBC News
ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் பேருந்துகளைக் குறிவைத்து உக்ரைன் திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தி வருவதாக மொஸ்கோ குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்துப் பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, "போர்முனையில் அதிகரித்து வரும் தோல்விகளுக்குப் பழிவாங்கும் வகையில், சாதாரண மக்கள் பயணிக்கும் பொதுப் போக்குவரத்து மீது உக்ரைன் வெறித்தனமாகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது" எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |