கலைக்கப்பட்டது பங்களாதேஷ் நாடாளுமன்றம்
பங்களாதேஷ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றை கலைப்பது மாணவர் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களால் முக்கிய கோரிக்கையாக இருந்தது. உள்ளூர் நேரப்படி 15:00 (09:00 GMT) வரை அவர்கள் காலக்கெடுவை நிர்ணயித்தனர்.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் இடைக்கால தலைவர்
இராணுவம் தலைமையிலான அரசை ஏற்க மாட்டோம் என்று மாணவர் போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர், மேலும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ்(வயது84) இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராக இருக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
இதேவேளை பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராக இருக்க வேண்டும் என்ற போராட்டகாரர்களின் கோரிக்கைக்கு முஹமது யூனுஸ் ஒப்புக்கொண்டதாக அவரது செய்தித் தொடர்பாளரை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பாரிஸில் ஒரு சிறிய மருத்துவ சோதனைக்கு பிறகு யூனுஸ் "உடனடியாக" பங்களாதேஷுக்குத் திரும்புவார் என்று அவர்கள் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |