04 விமானங்கள் தாமதம் : மன்னிப்பு கோரிய சிறிலங்கன் எயார்லைன்ஸ்
SriLankan Airlines
Sri Lanka
By Sathangani
சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான 04 விமானங்கள் இன்று (25) காலை தாமதமாக வந்துள்ளதால் அனைத்து பயணிகளிடமும் மன்னிப்பு கோரியுள்ளது.
இன்று ஏற்பட்ட விமான தாமதம் தொடர்பில் சிறிலங்கன் எயார்லைன்ஸ் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
தற்காலிக மற்றும் திட்டமிடப்படாத செயற்பாடுகள் காரணமாக இந்த தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
மன்னிப்பு கோரல்
எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையினாலும் இந்த தவறு ஏற்படவில்லை என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் தாமதத்தினால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு அனைத்து பயணிகளிடமும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் மன்னிப்பு கோருவதாக கூறியுள்ளது.
அவ்வாறானதொரு நிலை மீண்டும் ஏற்படாத வகையில் சிறிலங்கன் விமான சேவை நிறுவனம் செயற்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி