சட்டவிரோதமான முறையில் கடலட்டைகளைக் கடத்திய நால்வர் கைது!
                                    
                    Mannar
                
                                                
                    Fishing
                
                                                
                    Sri Lanka Navy
                
                        
        
            
                
                By Kathirpriya
            
            
                
                
            
        
    சட்டவிரோதமான முறையில் உலர் கடலட்டைகளைக் கொண்டுசென்ற 04 பேர் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (16) மன்னார் கடற்பரப்பில் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் பயன்படுத்திய 02 படகுகள் மற்றும் 808 கிலோகிராம் நீரையுடைய உலர் கடலட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக
கைது செய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு மற்றும் கல்பிட்டி பிரதேசங்களில் வசிப்பவர்கள் என்றும், 18 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களும், கைப்பற்றப்பட்ட உலர் கடலட்டைகள் மற்றும் படகுகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 



                                        
                                                                                                                        
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்