யாழ் பல்கலையில் அரசறிவியலாளன் இதழ் வெளியீடு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் ஒன்றியத்தின் இதழான 'அரசறிவியலாளன்' 'இதழின் 06 ஆவது பாகம் வெளியீட்டு விழா கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றுள்ளது.
யாழ். பல்கலைக்கழக அரசறிவியல் ஒன்றியத்தின் தலைவர் சு.டிலக்சன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
மங்கல விளக்கு ஏற்றலுடன் இன்று பிற்பகல் (03.04.2024) 3.00 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் சி.சிறி சற்குணராசா, ஐபிசி குழும தலைவர் கந்தையா பாஸ்கரன் ஆகியோரும் கலந்துக்கொண்டுள்ளனர்.
முதல் பிரதி
மேலும், சிறப்பு விருந்தினராக கலைப்பீட பீடாதிபதி சி.ரகுராம், கௌரவ விருந்தினர்களாக, அரசறியியல் துறை தலைவர் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம், அரசறிவியல் துறை விரிவுரையாளர்களான ந.தர்மினி, கு.யஸ்மிகா உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.
வரவேற்பு உரை, தலமை உரையை தொடர்ந்து போசகர் உரையினை யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் தலைவர் பேராசிரியர் கே.ரீ கணேசலிங்கமும், வாழ்த்துரைகளை யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரும் நிகழ்வின் பிரதம விருந்தினருமான பேராசிரியர் சி.சிறிசற்குணராசா, கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், ஆகியோர் வழங்கியதை தொடர்ந்து வெளியீட்டுரையினை அரசறிவியல் துறை விரிவுரையாளர் கு.ஜஸ்மியா, நிகழ்தினார்.
அதனை தொடர்ந்து நூல் வெளியீடு இடம் பெற்றதுடன் அதில் முதல் பிரதியினை ஐபிசி குழும தலைவர் கந்தையா பாஸ்கரன் பெற்றுக் கொண்டதை தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
கலந்துக் கொண்டோர்
ஆய்வுரையினை யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை வருகை விரிவுரையாளரும், சட்டத்தரணியும், அரசியல் ஆய்வாளரும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் நிகழ்த்தினார், இதனை தொடர்ந்து ஏற்புரையினை இதழாசிரியர் நிகழ்த்தினார்.
இதில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழக பேராசிரியர், விரிவுரையாளர்கள், பீடாதிபதிகள், பல்கலைக் மாணவர்கள் தொழிலதிபர்கள், நலன்விரும்பிகள், ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |