சிறிலங்கா கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை : மன்னாரில் ஒன்பது பேர் கைது!
சட்டவிரோதமான முறையில் கடலட்டைகளைப் பிடித்த 09 பேர் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (20) இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டைகளை பிடித்த 09 பேரை சிறிலங்கா கடற்படையினர் கைது செய்தனர்.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக
இதன் போதுது குறித்த சந்தேக நபர்களிடம் இருந்த சுமார் 1,384 கடலட்டைகள், மற்றும் அவர்கள் பயன்படுத்திய 03 படகுகள் என்பனவும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 முதல் 47 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் மன்னாரில் வசிப்பவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள், அவர்களின் உபகரணங்கள் மற்றும் கடலட்டைகள் போன்றவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் உதவி பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்