இலங்கையில் 09 ஈரானியர்களுக்கு விதிக்கப்பட்டது ஆயுள் தண்டனை
04 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்பில் படகு மூலம் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஈரானியர்கள் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019 ஆம் ஆண்டில், படகில் வந்த சந்தேகநபர்கள் 1 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 100 கிலோ ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டனர், அதே நேரத்தில் 500 கிலோகிராம் பெறுமதியான மற்றொரு ஹெரோயின் கையிருப்பு கடலில் கொட்டப்பட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.
குற்றத்தை ஒப்புக் கொண்டதால்
இந்த வழக்கின் சாட்சிய விசாரணை இன்று ஆரம்பமாகிய நிலையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தேக நபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

நாடு கடத்த உத்தரவு
இலங்கை கைச்சாத்திட்ட சர்வதேச உடன்படிக்கையின் பிரகாரம் சிறைத்தண்டனையை அனுபவிக்கும் வகையில் பிரதிவாதிகளை ஈரானுக்கு நாடு கடத்துமாறும் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து பிரதிவாதிகளும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்ததை அடுத்து இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
2 நாட்கள் முன்