ஓகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஓகஸ்ட் மாதத்தில் அதிகரித்துள்ளது.
அதன்படி, இந்த மாதத்தின் முதலாம் திகதி முதல் 8ஆம் திகதி வரையான எட்டு நாட்களில் 53,150 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்த நிலையில், நாட்டிற்கு இதுவரை 1,252,209 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கோடை காலம்
ஏப்ரல் மாதத்தில் 35,000 பேரும், மே மாதத்தில் 26,000 பேரும், ஜூன் மாதத்தில் 27,000 பேரும், ஜூலை மாதத்தில் 43,000 பேரும் வாராந்தம் வருகை தந்துள்ளனர்.
ஓகஸ்ட் மாதத்தில் வாராந்த சராசரி வருகை 46,000 ஆகவும், நாளாந்த வருகை சராசரியாக 6,600 ஆகவும் உள்ள நிலையில் கோடை காலம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும், சுற்றுலா மற்றும் வருகை தரு விசா வழங்குவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக, எதிர்வரும் வாரங்கள் மற்றும் மாதங்களுக்கு இந்த வேகத்தைத் தக்கவைக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |