தேர்தல் சட்டங்களை மீறும் வேட்பாளர்களின் பதவிகளுக்கு ஏற்படப்போகும் சிக்கல்
ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் தேர்தல் சட்டங்களை மீறினால், தேர்தலின் பின்னரும் அவர்களின் பதவிகளை நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகள் மற்றும் தற்போதுள்ள அளவுகோல்களின் அடிப்படையில் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும்.
தேர்தல் சட்டங்கள்
அத்துடன் தேர்தல் சட்டத்தை மீறுவோருக்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
எந்தவொரு வேட்பாளரும் தேர்தல் சட்டங்களை மீறினால், ஜனாதிபதி தேர்தலின் பின்னரும் அவர்களின் பதவிகளை நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியும்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும்.
ராஜகிரிய, சரண மாவத்தையில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும்'' என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை ஐபிசி தமிழின் காலை நேர செய்தியில் காண்க....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |