இலங்கையின் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து வெளியான தகவல்
இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70 சதவீதம் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய (07) நாடாளுமன்ற அமர்வின் போது கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சரிடம், நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னசிறி (Sunil Rathnasiri) கேள்வி எழுப்பிய போதே இந்தத் தகவல் தெரியவந்தது.
ஆண்டுதோறும் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பான விடயங்களைக் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க (Chathuranga Abeysinghe), இதன்போது முன்வைத்தார்.
20 மில்லியன் தொன் பொலித்தீன் பை
அதன்படி, ஆண்டுதோறும் 20 மில்லியன் தொன் தயிர் சட்டிகளும், 15 மில்லியன் தொன் லஞ்ச் ஷீட்களும், 20 மில்லியன் தொன் பொலித்தீன் பைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனில் சுமார் 70 சதவீதம் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படுவதால், ஆண்டுதோறும் அதிக அளவு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் சுற்றுச்சூழலில் வெளியிடப்படுவதாகவும் இதனால் அவற்றைக் குறைப்பதில் அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகவும்” பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
