அநுரவின் ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு கிடைத்த அந்நிய நேரடி முதலீடு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அரசசாங்கத்தைப் பொறுப்பேற்ற காலம் முதல் அந்நிய நேரடி முதலீடாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான செலாவணி பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் 1.048 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அந்நிய செலாவணி பெறப்பட்டதாக இலங்கை முதலீட்டுச் சபையின் (Board of Investment of Sri Lanka) தலைவர் அர்ஜூன ஹேரத் (Arjuna Herath) குறிப்பிட்டுள்ளார்.
துறைமுகங்கள் தொடர்பான நிர்மாணப்பணிகள், சுற்றுலாத்துறை மற்றும் டயர் தொழில் போன்றவற்றின் மூலமே பாரிய முதலீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
குறிப்பாக கிடைக்கப்பெற்ற முதலீடுகளில் 65 சதவீதமானவை சர்வதேச ரீதியான முதலீட்டாளர்களால் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர ஜனாதிபதி பதவி ஏற்ற காலத்தில் இருந்து 152 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளதாகவும் இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
