வீடு காணி இழந்தவர்களுக்கு 1கோடி உதவித்தொகை! நாடாளுமன்றில் அநுர உறுதி

Anura Kumara Dissanayaka Sri Lanka
By Dharu Dec 05, 2025 02:29 PM GMT
Report

மத்திய வங்கி வெளியிடவுள்ள சுற்றறிக்கையின்படி அனர்த்த நிதி திட்டமிடல்கள் விரைவில் செயற்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் காப்புறுதி தவணை முறையில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பிலும் விரைவில் கலந்துரையாடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், 

பாதிக்கப்பட்ட மக்கள்

“பாதிக்கப்பட்ட மக்களை இருந்ததை விட சிறந்த இடத்திற்கு கொண்டுசெல்ல கடமைப்பட்டுள்ளோம். இது விரைவில் சாத்தியமாக்கப்படும்.

குறிப்பாக மாணவர்களுக்கு விசேட உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. திறைசேரியில் இருந்து 15000ரூபாவும், ஜனாதிபதி நிதியில் இருந்து 10000 ரூபாவையும் வழங்கவுள்ளோம்.

குறிப்பாக வீடுகளை முற்றுமுழுதாக இழந்தவர்களுக்கு 50 இலட்சத்தை வழங்கவுள்ளோம். காணிகள் தொடர்பாகவும் கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும். அவர்களுக்கும் 50 இலட்சத்தை வழங்கவுள்ளோம்.

காணி மற்றும் வீடு இரண்டையும் இழந்தவர்களுக்கு சரியாக ஆராய்ந்து 1கோடி ரூபா வழங்கப்படும். வீடுகளை பகுதியளவில் இழந்தவர்களுக்கு மறுசீரமைப்பு அடிப்படையில் 25 இலட்சம் ரூபாவை 4 தவணைகளில் வழங்கவுள்ளோம்.

தகரம் இல்லாது போயிருந்தால் கூட 10 இலட்சம் வழங்கப்படும். முன்னர் போல 2000 ரூபா வழங்குவதால் என்ன பயன்?

மரணித்தவர்களுக்கு 10 இலட்சம் உறவினர்களிடத்தில் வழங்கப்படும். உயிரிழந்தவர்களுக்கு பெறுமதியை வழங்க முடியாது. இருந்தாலும் இந்த மக்களின் வாழ்க்கையை சீரமைப்பதை விட வேறு எதுவும் முக்கியமிக்க விடயம் அல்ல” என கூறியுள்ளார்.

உயிர் தியாகம் செய்த விமானி..! பாலத்தில் இறக்கினால் ஹெலிகொப்டர் வெடித்திருக்கும்: விமானப்படை

உயிர் தியாகம் செய்த விமானி..! பாலத்தில் இறக்கினால் ஹெலிகொப்டர் வெடித்திருக்கும்: விமானப்படை

வரலாற்றில் பொறிக்கப்படவுள்ள உயிரிழந்த விமானப்படை அதிகாரியின் பெயர்! அநுர உறுதி

வரலாற்றில் பொறிக்கப்படவுள்ள உயிரிழந்த விமானப்படை அதிகாரியின் பெயர்! அநுர உறுதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016