அமெரிக்காவில் பேரணியின் போது துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி பலர் காயம்
அமெரிக்காவில் சூப்பர் பெளல் விளையாட்டின் வெற்றிப் பேரணியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருபதிற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் மிசோரி மாகாணம் கன்ஸாஸ் நகரில் உள்ளூர் சூப்பர் பெளல் போட்டியில் வெற்றி பெற்ற அணியினர் நேற்று (14) ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மத்தியில் பேரணியாகச் சென்று கொண்டிருந்தனர்.
இந்தப் பேரணியின் இறுதியில் ரசிகர்கள் மத்தியில் வீரர்கள் உரையாற்றிய சிறிது நேரத்தில் கலவரம் ஏற்பட்டுள்ளது.
திடீரென்று துப்பாக்கிச் சூடு
இந்த கலவரத்தின்போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ரசிகர்கள் மீது திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் 9 குழந்தைகள் உட்பட 20இற்கு மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்