அதிகாலையில் கோர விபத்து : 12 பேர் படுகாயம்
தனியார் பேருந்து ஒன்றும் ஆடை தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற வேனுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் படு காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து கந்தகெட்டிய - போபிட்டிய வீதியில் இன்று (17) காலை 06.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஆடை தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற வேனுடன் வெவேதென்ன பிரதேசத்தில் வைத்து தனியார் பேருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் வேனில் பயணித்த 8 பெண்கள் உட்பட 12 பேர் காயமடைந்து கந்தகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஏழு பேர் மேலதிக சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தகெட்டிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
