கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய இணைப்பு
நெடுந்தீவுக்கு அருகில் கைதான இந்திய கடற்றொழாளர்களை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நெடுந்தீவு அருகே ராமேஸ்வரத்தை சேர்ந்த 10 கடற்றொழிலாளர்கள் எல்லைதாண்டி தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை கடற்றொழிலில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் ஊடாக இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இவர்கள் முற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - தீபன்
முதலாம் இணைப்பு
நெடுந்தீவுக்கு அருகில் இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்ததாக 10 இந்திய கடற்றொழிலாளர்கள் கொண்ட குழுவை சிறிலங்கா கடற்படை இன்று (ஜனவரி 13) காலை கைது செய்துள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடற்றொழிலாளர்கள் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டவர்கள் காரைநகர் கடற்படைமுகாமிற்கு
அவர்கள் வந்த படகும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடற்றொழிலாளர்களும் படகும் காரைநகர் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டன.

நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவதற்கு முன்பு அவர்கள் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |