அத்துமீறும் இந்திய படகுகள் - யாழ் வடமராட்சி கடலில் அதிகளவாக சிக்கும் இறால்
யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி கிழக்கு கடலில் தற்போது அதிகளவான இறால் கடற்றொழிலாளர்களினால் பிடிக்கப்பட்டு வருவதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிடிக்கப்படும் இறால் தரம் பிரிக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன எனவும் கடற்றொழிலாளர்கள் கூறியுள்ளனர்.
வடக்கு கடலில் தற்போது இறால் பிடிபடும் பருவம் என்பதால் வடக்கு கடற்றொழிலாளர்கள் வருமானம் ஈட்டுவதற்கு ஆர்வமாக உள்ள போதும் இந்தியன் இழுவைமடி படகுகளின் அத்துமீறிய வரத்தால் இறால் தொழிலும் கேள்விக்குறியாகியுள்ளது.
அதிகாலை கைது
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் வந்த ஒரு விசைப்படகையும் (TN 10 MM 513), அதிலிருந்த பத்து கடற்றொழிலாளர்களையும் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் இன்று (13) அதிகாலை கைது செய்தனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இவர்கள், படகுடன் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கைதான கடற்றொழிலாளர்கள் மற்றும் படகு ஆகியன நீரியல் வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
செய்தி - பிரதீபன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |