பெண்ணின் கருப்பையிலிருந்து அகற்றப்பட்ட 10 கிலோ கட்டி
Hambantota
Doctors
Disease
By Sumithiran
பெண் ஒருவரின் கருப்பையில் இருந்து 10 கிலோ எடையுள்ள கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை யில் நடைபெற்ற இந்த சத்திரசகிச்சையிலேயே கட்டியை அகற்றி அந்த வைத்தியசாலை வைத்தியர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
சாதனை படைத்த வைத்தியர்கள்
மகப்பேற்று வைத்திய நிபுணர் சமந்த சமரவிக்ரம உள்ளிட்ட வைத்தியர்கள் குழு இந்த சாதனையை நிகழ்தியுள்ளனர்.
சத்திரசிகிச்சைக்கு உள்ளான 40 வயதுடைய பெண் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த 2019 ஆம் ஆண்டு (05.10.2019) பெண் ஒருவரின் வயிற்றிலிருந்த 19.5 கிலோ கிராம் நிறையுள்ள கட்டியொன்றினை வெட்டி அகற்றி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர்கள் சாதனை படைத்திருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்