அஸ்வெசும கொடுப்பனவில் ஒரு கோடி ரூபா மோசடி!

Sri Lanka Crime Arrest
By Pavi Aug 04, 2026 06:58 AM GMT
Report

அஸ்வெசும நிவாரணக் கொடுப்பனவுகளில் ரூ.01 கோடிக்கும் அதிகமான நிதி மோசடி இடம்பெற்றதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

 சம்பவம் தொடர்பாக, அட்மையில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண் அதிகாரிகள் ஹற்றன் பிராந்திய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

ஆரம்பக்கட்ட விசாரணைகளில் 25 இலட்சம் என கண்டறியப்பட்ட நிலையில் தற்போதைய விசாரணையில் குறித்த விடயம் அம்பலமாகியுள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

அஸ்வெசும

2024ஆம் ஆண்டு முதல் இதுவரை ரூ.01 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடி செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஹற்றன் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர தெரிவித்தார்.

அஸ்வெசும கொடுப்பனவில் ஒரு கோடி ரூபா மோசடி! | 10 Million Rupee Fraud In Aswesuma Payments

உண்மையான பயனாளிக் குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய அஸ்வெசும நிதியை, தங்களது உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி வரவு வைத்ததன் மூலம் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் கணக்குப் பிரிவில் பணியாற்றிய அதிகாரிகளாவர்.

1 கோடி மோசடி

அஸ்வெசும கொடுப்பனவு வழங்கலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பாக நோர்வூட் பிரதேச செயலகத்திற்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்தது.

அஸ்வெசும கொடுப்பனவில் ஒரு கோடி ரூபா மோசடி! | 10 Million Rupee Fraud In Aswesuma Payments

இதைத் தொடர்ந்து, பிரதேச செயலாளர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஹற்றன் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதனுடன், நுவரெலியா மாவட்டச் செயலாளரின் ஆலோசனையின் பேரில் உள்ளக விசாரணையும் முன்னெடுக்கப்பட்டது.

விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், சந்தேக நபர்களில் ஒருவர் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கும், மற்றையவர் தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்

கைது செய்யப்பட்ட இரு பெண் அதிகாரிகளும் 30 மற்றும் 33 வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த மோசடி தொடர்பில் மேலும் சிலரின் தொடர்பு குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சந்தேகநபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இரு வாரங்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எழுந்துள்ள சிக்கல் - உயர்தர பரீட்சை தொடர்பான அவசர கலந்துரையாடல்

எழுந்துள்ள சிக்கல் - உயர்தர பரீட்சை தொடர்பான அவசர கலந்துரையாடல்

உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி