பிரேசிலில் முகாம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து: 10 பேர் பலி
தெற்கு பிரேசிலில் போர்டோ அலெக்ரே நகரில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்றினால் பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த தீ விபத்தானது, வீடற்றோருக்கு முகாமாக செயற்பட்டு வந்து விடுதியொன்றில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் விபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் தீயினால் பாதிக்கப்பட்டவர்களை இனங்காணவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தடவியல் நிபுணர்கள்
அதேவேளை, இந்த விபத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கு தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
At least 10 people have been killed after a fire broke out at a defunct hotel being used as a makeshift homeless shelter in the southern Brazilian city of Porto Alegre, say officials. https://t.co/vMks6lkp7r
— Al Jazeera English (@AJEnglish) April 26, 2024
விபத்து தொடர்பில் மாநில ஆளுநர் எடுவார்டோ லைட் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |