வசீம் தாஜுடீனின் கொலைக்கு நீதிகோரி காலிமுகத்திடல் நோக்கி பேரணி (படங்கள்)
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ரக்பீ வீரர் வசீம் தாஜுடீனுக்கு இதுவரை நீதி கிடைக்காத நிலையில், 10 வருடங்கள் கடந்துள்ளன.
இந்த நிலையில் வசீம் தாஜுடீனின் கொலைக்கு நீதி கோரி கொழும்பு காலிமுகத்திடல் நோக்கி பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
2012 ஆம் ஆண்டில் கொழும்பு நாரஹேன்பிட்டி சாலிக்கா விளையாட்டு மைதானத்திற்கு அருகில் எரிந்த நிலையிலிருந்த காரிலிருந்து ரக்பீ வீரர் வசீம் தாஜுடீனின் சடலம் மீட்கப்பட்டது.
இதுவொரு விபத்து என்று அப்போது கூறப்பட்ட போதிலும், 2015ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய நல்லாட்சி அரசாங்கத்தினால் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் தாஜுடீனின் மரணம் திட்டமிட்ட படுகொலை என்று தெரியவந்தது.
எனினும் வாகன விபத்திலேயே வசிம் தாஜுடீன் உயிரிழந்ததாக, கொழும்பு மாவட்டத்தின் அப்போதைய பிரதான சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகர அறிக்கையிட்டிருந்தார்.
அவர் சாட்சியங்களை மறைத்ததாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழக்கு தொடரப்பட்ட போதிலும் முழுமையான விசாரணைகள் இன்றி, நல்லாட்சி வீழ்ந்த பின்னர் வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வசீம் தாஜுடீன் சடலமாக மீட்கப்பட்டு இன்றுடன் 10 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், கொழும்பு காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடம்நோக்கி பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டியில் உள்ள வசீம் தாஜுடீனின் பாடசாலை மாணவர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பலர் இந்த பேரணியில் பங்கேற்று கொழும்பு காலி முகத்திடலுக்கு சென்றுள்ளனர்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
