உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் - இடம்பிடித்த ஒரேயொரு இலங்கைப்பெண்
2022ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்குமிக்க நூறு பெண்கள் கொண்ட பட்டியலை பி.பி.சி. வெளியிட்டுள்ளது. அதில் இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண்ணும் இடம்பிடித்துள்ளார். அவரது பெயர், சந்தியா எக்னெலிகொட.
மனித உரிமைகள் ஆர்வலர் சந்தியாவின் கணவரான பிரகீத் எக்னெலிகொட (Prageeth Eknaligoda), இலங்கை அரசை கடுமையாக விமர்சித்த ஒரு பத்திரிகையாளர் ஆவார். 2010ஆம் ஆண்டு திடீரென மாயமானார்.வேறு வார்த்தைகளில் கூறினால், காணாமல் ஆக்கப்பட்டார்.
கணவருக்காக நீதி கோரி போராட்டம்
தன் கணவருக்காக நீதி கோரி போராடி வரும் சந்தியா, தன் கணவரைப்போலவே காணாமல் ஆக்கப்பட்ட மற்றவர்கள் சார்பிலும் குரல் கொடுத்து வருகிறார்.
உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள உலகெங்கிலும் உந்துதல் அளிக்கக்கூடிய மற்றும் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கக்கூடிய 'பிபிசி 100 பெண்கள்' பட்டியலை பிபிசி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள்
2022ஆம் ஆண்டுக்கான பட்டியலை பிபிசி தற்போது வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான பிபிசியின் 100 பெண்கள் பட்டியலில், நடிகை பிரியங்கா சோப்ரா உட்பட நான்கு இந்திய பெண்களும் இடம்பெற்றுள்ளார்கள்.