நாடு முழுவதும் திறக்கப்படவுள்ள 100 சுபோஷா விற்பனை நிலையங்கள்
எதிர்காலத்தில் நாடு முழுவதும் சுமார் 100 சுபோஷா விற்பனை நிலையங்களை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக திரிபோஷ நிறுவனம் (Sri Lanka Thriposha Limited) அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் திரிபோஷ பொருட்களின் விநியோகம் மற்றும் எதிர்கால உற்பத்தி நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) நேற்று (04) கந்தானையில் உள்ள திரிபோஷா நிறுவனத்தில் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.
திரிபோஷா நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் உற்பத்தியைத் தொடர எடுக்க வேண்டிய தீர்மானங்கள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.
திரிபோஷா உற்பத்தி
இதேவேளை திரிபோஷா உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான கருத்துக்கள் முற்றிலும் பொய்யானவை என அண்மையில் சிறிலங்கா திரிபோஷா நிறுவனம் அறிவித்திருந்தது.
அத்துடன் நிறுவனத்தின் செயற்பாடுகளை பராமரிக்க தேவையான சோளத்தை வாங்குவதற்கு நேரடி மற்றும் வெளிப்படையான முடிவுகள் எடுக்கப்பட்டு, விநியோகங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
