புறப்பட தயாரான விமானத்தில் இருந்து பாய்ந்தோடிய பயணிகள்: வெளிநாடொன்றில் சம்பவம்
ஸ்பெயின் நாட்டின் பால்மா டி மயோர்கா (Palma de Mallorca) விமான நிலையத்தில், மான்செஸ்டர் நோக்கி புறப்பட்டு செல்ல இருந்த ரயனேர்ஏர் (Ryanair) விமானத்தில் ஏற்பட்ட தீவிபத்து எச்சரிக்கையால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் அதிகாலை 12:30 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதன்காரணமாக பீதியடைந்த பயணிகள் உடனடியாக அவசரவழிகள் வழியாக வெளியேற்றப்பட்டனர்.
அந்த நேரத்தில், சிலர் விமானத்தின் இறக்கைகள் வழியாக நேரடியாக தரை மீது குதித்து பாதுகாப்பாக வெளியேறினர்.
புறப்பட்ட மாற்று விமானம்
சம்பவத்தில் காயமடைந்த 18 பேரில் 06 பேர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Ryanair 737-800 evacuated at Palma de Mallorca Airport after a fire indication developed on board during taxi.
— Breaking Aviation News & Videos (@aviationbrk) July 5, 2025
The SAMU061 coordination center received a call at a.m, reporting a fire on flight RK3446 to Manchester.
A total of 18 people were injured during the evacuation, six… pic.twitter.com/XpCCejGq2t
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பயணிகளின் அசௌகரியத்திற்கு மன்னிப்பு தெரிவித்த ரயனேர் நிறுவனம், மாற்று விமானத்தைச் சிறிது நேரத்தில் தயார் செய்ததாகவும், அந்த விமானம் காலை 07:05 மணிக்கு புறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
