“ஈகைப்பேரொளி” செந்தில்குமரனின் 10 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள் இன்று
Sri Lankan Tamils
Switzerland
By Vanan
“ஈகைப்பேரொளி” இரத்தினசிங்கம் செந்தில்குமரனின் 10 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள் இன்று(5) இடம்பெறவுள்ளது.
ஈகைப்போராளி முருகதாசன் திடலில் இதற்கான நிகழ்வுகள் மாலை (ஐரோப்பிய நேரம்) 18.30 தொடக்கம் 19.30 சுவிஸ் இளையோர் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்களுக்காக உயிர்த்தியாகம்
“அனைவரும் ஒன்றிணைந்து உங்கள் உரிமையை நீங்களே வென்றெடுக்க வேண்டும்.” என்ற உருக்கமான வேண்டுகோளோடு 05.09.2013 அன்று ஐ.நா முன்றலில் முருகதாசன் திடலிலே உடலினில் தீமூட்டி உயிர்த்தியாகம் செய்திருந்தார்.

சுவிஸ் சிசன் நகரில் வசித்து வந்த 35 அகவையுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், தொடர் போராட்டங்களின் இறுதியில் தன்னை ஓர் உயிர் ஆயுதமாக்கி, ஈழத்தமிழர்களுக்கான விடுதலையை வலியுறுத்தி தன்னை மாய்த்துக்கொண்டார்.
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 23 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
4 நாட்கள் முன்
15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்த கோட்டாபய
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்