கட்டுநாயக்கவில் இப்படியும் ஒரு சம்பவம் : துல்லியமாக கண்டுபிடித்த அதிகாரிகள்
Sri Lanka Police
STF
Bandaranaike International Airport
Dubai
By Sumithiran
8 months ago
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் கணினி சாதனங்களில் மறைத்து இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் பிரிவு, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் கொகஹேன காவல்துறை விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவை கண்டுபிடிக்கப்பட்டன.
விசாரணை நடத்திய அதிகாரிகள்
இவற்றின் மதிப்பு ஐந்து கோடியே பதினொரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் என விசாரணை நடத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
துபாயில் இருந்து விமான அஞ்சல் பொதி சேவை
டுபாயில்(dubai) இருந்து விமான அஞ்சல் பொதி சேவையின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள தனியார் களஞ்சியசாலைக்கு 63 கணனி சாதனங்களுடன் இந்த பொதிகள் அனுப்பப்பட்டுள்ளன.
இவ்வாறு அனுப்பப்பட்ட பொதிகளில் இருந்து 05 கிலோ 112 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி