ஈராக் திருமண மண்டபத்தில் தீ விபத்து : 113 பேர் பலி
Fire
Middle East
Iraq
By Sathangani
ஈராக்கில் திருமண நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட தீ விபத்தில் 113 பேர் உயிரிழந்துள்ளதுடன் 150 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு ஈராக் நகரமான அல்ஹம்டனியா மாவட்டம் ஹம்தானியாவில் உள்ள மண்டபம் ஒன்றில் நேற்று மாலை (26) திருமண நிகழ்வு நடைபெற்றது.
அப்போது திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டதில், தீ வேகமாக மக்கள் அதிகம் கூடியிருந்த பகுதிகளுக்கும் பரவியதனால் இந்த அனர்த்தம் ஏற்பட்டது.
பட்டாசு வெடித்ததால் விபத்து ஏற்பட்டது
இதேவேளை காயமடைந்த பலர் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என கூறப்படுகிறது.
திருமண நிகழ்வில் பட்டாசு வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி