முக்கிய 12 நாடுகளின் உயர் அதிகாரிகளுடன் எதிர்க்கட்சிகள் விசேட கலந்துரையாடல்!
12 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் மற்றும் எதிர்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.
இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்தும் முதன்மை நோக்கத்துடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
நோக்கம்

குறிப்பாக, இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டல், அரசியலமைப்பைப் பாதுகாத்துக் கொள்ளல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது போன்ற விடயங்கள் தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
இலங்கையைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் தூதுவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, நியூசிலாந்து, நெதர்லாந்து, இத்தாலி, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா ஆகிய தூதரகங்களின் இலங்கைக்கான தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.




