யாழில் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள் 12 பேர் கைது
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு அருகே மீன்பிடியில் ஈடுபட்ட காரைக்கால் கடற்றொழிலாளர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து மீன்பிடிக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு படகும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவர்கள் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துவரப்பட்டு கடற்படையினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகளிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டு யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதவான் இல்லத்தில் முன்னிலைப்படுத்தப்பட போது அக்டோபர் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
முதலாம் இணைப்பு
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த 12 கடற்றொழிலாளர்கள் படகொன்றின் மூலம் நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து நேற்று (27.09.2025) கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததுடன், அவர்களின் படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை மயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மேலும், கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |