கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு : வெளியான அறிவிப்பு
கொழும்பின் (Colombo) சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (National Water Supply and Drainage Board) அறிவித்துள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இன்றைய தினம் (15.01.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் விநியோக தடை
குறித்த அறிக்கையில் கொழும்பிற்கு நீர் வழங்கும் பிரதான குழாய்த்திட்டத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (16.01.2025) மாலை 6.00 மணி முதல் நாளை மறுநாள் (17.01.2025) காலை 6.00 மணி வரை 12 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம் இவ்வாறு தடை செய்யப்படவுள்ளது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீர் விநியோக தடை நடைமுறைப்படுத்தும் பகுதிகள்
Colombo 12 | புதுக்கடை |
Colombo 13 | கொட்டாஞ்சேனை , கொச்சிக்கடை |
Colombo 14 | கிரேன்பாஸ் |
Colombo15 | மட்டக்குளி , மோதரை , மாதம்பிட்டிய |
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |