வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் போலி வைத்தியர்கள்: விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
World Health Day
Northern Province of Sri Lanka
Doctors
Nalinda Jayatissa
By Thulsi
போலி வைத்தியர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அநுர அரசால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "வடக்கு உட்பட நாட்டின் 9 மாகாணங்களிலும் போலி வைத்தியர்கள் சிலர் கடமையாற்றுகின்றார்கள்.
எதிராகச் சட்ட நடவடிக்கை
அவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவத்துறை மகத்தானது. போலி வேடம் தயாரித்து எவரும் மருத்துவத்துறைக்குள் உள்நுழைய முடியாது.
மக்களின் உயிருடன் விளையாட எவருக்கும் இடமளிக்க முடியாது என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்