இலங்கை கடற்படையினரால் 12 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது
சர்வதேச கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், ராமநாதபுரம் ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 12 கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கைது நடவடிக்கை இன்று இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய ஊடகத்தின் கூற்றுப்படி , "12 கடற்றொழிலாளர்களும் தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் நீர்நிலைகளுக்கு இடையில் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக கடற்றொழில் அதிகாரிகள்
அவர்களின் இழுவைப் படகுடன் இலங்கை கடற்படை அங்கு உள்ள ஒரு கடற்படைத் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றது என்று தமிழக கடற்றொழில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று திங்கட்கிழமை (டிசம்பர் 22), ராமேஸ்வரம் ஜெட்டியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு சுமார் 450 டோக்கன்கள் வழங்கப்பட்டன.

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட இழுவைப் படகு தங்கச்சிமடம், மாந்தோப்புவைச் சேர்ந்த ஜோதிபாஸ் என்பவருக்குச் சொந்தமானது.
தமிழக அதிகாரிகளிடம் பதிவு செய்யப்படாத இந்தப் படகு டோக்கன் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதில் பிரபாத் (28), ஜேம்ஸ் ஹெய்டன் (29), ஆண்டனி (32) உள்ளிட்ட 12 கடற்றொழிலாளர்கள் அடங்குவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்” என கூறப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |