பாகிஸ்தான் நிலக்கரிச் சுரங்கத்தில் வெடி விபத்து : 12 பேர் பலி
Pakistan
World
By Sathangani
பாகிஸ்தானின் நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலோசிஸ்தான் பகுதியில் ஹார்னாய் மாவட்டத்தில் நேற்று இரவு (19) இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்பு நடவடிக்கைகள் இன்று (20) பிற்பகல் நிறைவடைந்ததாக பலோசிஸ்தான் மாகாண சுரங்க கண்காணிப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சுரங்கத்திற்குள் 20 ஊழியர்கள்
வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றபோது சுரங்கத்துக்குள் 20 ஊழியர்கள் இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
சுரங்கத்திற்குள் சுமார் 240 மீற்றர் (800 அடி) ஆழத்தில் நிலத்தடியில் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
அவர்களில் 8 பேர் காப்பாற்றப்பட்டதுடன் 12 பேர் உயிரிழந்தனர் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி