சர்வதேச கடல் எல்லையில் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது

Indian fishermen Sri Lanka India
By Kathirpriya Oct 25, 2023 08:29 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

இலங்கை - இந்திய சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்ட சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இலங்கையிலிருந்து படகு மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நேற்று முன்தினம் (23) மாலை சுங்கத்துறையினரால் இந்தியக் கடலோர காவல் படையினருடன் இணைந்து இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சர்வதேச கடல் எல்லையில் இருந்து தூரத்தில் இந்திய கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 4 மீன்பிடி படகுகளையும் அதிலிருந்த 8 இலங்கை நபர்களிடமும் இந்திய கடலோர காவல் படையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இலங்கைக்கு வழங்கவுள்ள 100 மில்லியன் டொலர் கடன்: அரசு எடுத்த நடவடிக்கை

இலங்கைக்கு வழங்கவுள்ள 100 மில்லியன் டொலர் கடன்: அரசு எடுத்த நடவடிக்கை

கடத்தல் பொருட்கள்

விசாரணைகளின் போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில்களை அளித்ததால் அவர்களை கைது செய்த இந்திய கடலோர காவல் படை வீரர்கள் மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகம் அழைத்துச் செல்ல முடிவு செய்தனர்.

செல்லும் போது நடுக்கடலில் மண்டபம் மரைக்காயர் பட்டணத்தைச் சேர்ந்த நாட்டு படகை பிடித்து சோதனை செய்த போது படகில் 35 மூட்டைகளில் 594 கிலோ சமையல் மஞ்சள் மற்றும் 300 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்ததையடுத்து அந்த படகையும் அதிலிருந்த நால்வர் என மொத்தமாக 12 பேரை கைது செய்து மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடல் அட்டைகள் மற்றும் சமையல் மஞ்சள் மூட்டைகளை புத்தளம் மற்றும் கற்பிட்டிக்கு கடத்திச் சென்ற போது பிடிபட்டதாக ஒப்புக்கொண்டனர்.

ஹமாஸ் அமைப்புக்கு பேரிழப்பு: ஒரே நாளில் கொல்லப்பட்ட தளபதிகள்!

ஹமாஸ் அமைப்புக்கு பேரிழப்பு: ஒரே நாளில் கொல்லப்பட்ட தளபதிகள்!

சர்வதேச கடல் எல்லையில் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது | 12 People Areested For Smuggling At Sea Border

தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட கடத்தல் பொருட்களை பெற்று செல்வதற்காக 4 படகுகளில் இலங்கை நபர்கள் காத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து தமிழகத்தை சேர்ந்த நால்வரையும் கடத்தல் பொருட்களுடன் ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்டனர்.

மேலும் இலங்கையைச் சேர்ந்த நான்கு படகையும் அதிலிருந்து எட்டு நபர்களையும் மண்டபம் நீரியல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

நாட்டில் பல இடங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் கன மழை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டில் பல இடங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் கன மழை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சட்டவிரோத நடவடிக்கை

பின்னர் அவர்கள் மீது சட்டவிரோதமாக கடவுச்சீட்டு இன்றி இந்தியாவுக்குள் நுழைந்தாக வழக்கு பதிவு செய்து ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி புழல் சிறையில் அடைப்பதற்கு நடவடிக்கைகள் நடை பெற்று வருகிறது.

இதுகுறித்து நீரியல் காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் கைது செய்யப்பட்ட 08 இலங்கையர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச கடல் எல்லையில் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது | 12 People Areested For Smuggling At Sea Border

நடுக்கடலில் தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் மஞ்சள் மூட்டைகளை பெறுவதற்காக காத்திருந்தார்களா? அல்லது சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக இந்திய கடற்பரப்பிற்குள் நுழைந்தார்களா? என விசாரணை நடைபெற்று அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அவர்கள் மீது கடவுச்சீட்டு இன்றி இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

மொட்டுக்கட்சி விவகாரம்: கடும் கோபத்தில் வலியுறுத்திய ரணில்

மொட்டுக்கட்சி விவகாரம்: கடும் கோபத்தில் வலியுறுத்திய ரணில்

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Toronto, Canada

31 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டகச்சி, பேர்ண், Switzerland, பரிஸ், France

11 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
நன்றி நவிலல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024